What are you looking for?

தமிழ்த்துறை

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

தமிழ்த்துறை
இளங்கலைத் தமிழ் இலக்கியம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் அமைந்துள்ள இலொயோலா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்குப் பொதுத்தமிழ் பாடத்தைக் கற்பிக்கும் துறையாக 2009-2010-ஆம் கல்வியாண்டில் தமிழ்த்துறை தொடங்கப்பட்டது. கடந்த 2019-2020-ஆம் கல்வியாண்டில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பை (BA - TAMIL) கற்பிக்கும் துறையாக தமிழ்த்துறை வளர்ச்சி அடைந்தது. பேரா.கு.அந்தோணிராஜா அவர்கள் தமிழ்த்துறைத் தலைவராகவும் பேரா.அ.ஷீலா பேரா.அ.ஆரோக்கியதாஸ் பேரா.ஞா.சேகர் பேரா.அ.செல்லதுரை முனைவர்.சி.இரகு ஆகியோர் துறைப் பேராசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களை ஒழுக்கத்திலும் கல்வியிலும் மேம்பட்டவர்களாக உருவாக்குவதே எங்களின் நோக்கமாகும். அவர்களுக்கு அரசு சார்ந்த உதவித் தொகையினையும் கல்லூரி நிர்வாகம் சார்ந்த உதவித் தொகையினையும் வழங்க ஆவன செய்கின்றோம். மாணவர்களி;ன் இலக்கிய ஆர்வத்;தையும் தனித் திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில் வீரமாமுனிவர் தமிழ் இலக்கிய மன்றத்தின் மூலமாக ஆண்டுதோறும் பல்வேறு கருதரங்குகளையும் துறைகளுக்கு இடையிலான கவிதைப்போட்டி கட்டுரைப் போட்டி பேச்சுப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகளையும் நடத்தி ஊக்குவித்து வருகின்றோம். பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் மாணவர்களைப் பங்குபெறச் செய்து அவர்களின் திறமைகளை வளர்த்து வருகின்றோம்.

வேலை வாய்ப்புகள்:

இளங்கலைத் தமிழ்இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு ஏறக்குறைய 26 துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் பணி டி.என்.பி.எஸ்.சி-யில் அனைத்து விதமான நிலைகளிலும் அரசுப் பணி கல்லூரிப் பேராசிரியர் பணி பள்ளிகளில் ஆசிரியர் பணி வானொலி தொலைக்காட்சி திரைப்படத்துறை பத்திரிக்கைத்துறை சுவடியியல்துறை கல்வெட்டுத்துறை சுற்றுலாத்துறை தொல்லியல்துறை போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த பணிகள் ஆகியவற்றைப் பெற்றுத் தருவது தமிழ் இலக்கியம். மேலும் இப்படிப்பனைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்களுக்கு மலேசியா சிங்கப்ப10ர் ஆஸ்திரேலியா இலங்கை கனடா போன்ற நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வளமான தமிழால் நம் வாழ்வை வளப்படுத்துவோம்!!

நன்றி!

Contact Us

Phone Numbers
  • College Office : 04175-244 744
  • : 04175-244 944
  • Principal : 04175-244 288
  • Secretary : 04175-244 844
  • Residence : 04175-244 433
  • Fax : 04175-244 288
  • : 04175-244 744
Webmaster